நடிகர் வினுசக்கரவர்த்தி உயர் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார். நினைவு இழந்த நிலையில் உள்ள அவருக்கு, மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
‘குருசிஷ்யன்’, ‘அருணாசலம்’, ‘நாட்டாமை’, ‘மாப்பிளை கவுண்டர்’, ‘சிவப்பு நிலா’, ‘நினைத்தேன் வந்தாய்’, ‘ஜெமினி’ உள்பட பல படங்களில் நடித்தவர் வினுசக்கரவர்த்தி. இவர், கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவாக இருந்தார்.
இந்த நிலையில், அவருக்கு நேற்று திடீரென்று ரத்த அழுத்தமும், சர்க்கரையும் அளவு அதிகரித்ததால் மயங்கி விழுந்தார்.
இதையடுத்து அவர் உடனடியாக சென்னை வடபழனியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆபத்தான நிலையில் உள்ள அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.