காதலில் ஏற்பட்ட சிக்கல் தற்கொலையில் முடிந்தது!!

511

-14614

கம்பளை சக்கரம் தொடுவ பிரதேசத்தில் உயர்தர மாணவி ஒருவர் திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்ததாக கூறப்பட்டபோதிலும் அவர் ஒரு வகை மாத்திரை உட்கொண்டதாலேயே மரணம் சம்பவத்திருப்பதாக தெரியவந்துள்ளது.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

காதல் தோல்வி காரணத்தால் மேற்படி மாணவி மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலை செய்திருப்பதாக தெரியவந்துள்ளது.

இதேவேளை மாணவியின் காதலன் எனக் கூறப்படும் இளைஞனும் ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.



இதன்படி மேற்படி உயர்தர மாணவியும் இளைஞனும் காதல் விவகாரத்தில் எழுந்த சிக்கல் காரணமாக வெவ்வேறு விதமாக தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சம்பவத்தில் கம்பளை உளம்புவையைச் சேர்ந்த அஸ்வினி என்ற உயர்தர மாணவியும் கடுகண்ணாவை விதியைச் சேர்ந்த மோனேஸ்வரன் (வயது21) என்ற இளைஞனுமே தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, கடந்த செவ்வாய்க்கிழமை குறித்த மாணவி தனது வீட்டில் இருந்த சமயம் திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்டதையடுத்து கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அன்றைய தினமே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மேற்படி மாணவியின் மரணத்தையடுத்து விரக்தியுடன் காணப்பட்ட மேற்குறிப்பிட்ட இளைஞன் பல தடவைகள் தற்கொலைக்கு முயற்சித்தும் நண்பர்களால் காப்பாற்றப்பட்டுள்ளார். இறுதியாக நேற்று 29 ஆம் திகதி புதன்கிழமை பகல் பதுளையிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற புகையிரதத்தின் முன்னால் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

மேற்படி சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கம்பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.