கலாம் காலத்தில் வாழ்ந்ததை ஆசீர்வாதமாக கருதுகிறேன்: ரஜினிகாந்த் உருக்கம்!!

461

rajini-and-aishwarya-in-tirupati

முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் மறைவுக்கு அனுதாபம் தெரிவித்து நடிகர் ரஜினிகாந்த் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறி இருப்பதாவது:-

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

மாணவர்களுக்கு தன் வாழ்நாளையே அர்ப்பணித்து அவர்களை ஊக்கப்படுத்தியவர் கலாம். கடவுள் அவரை அமைதியாக அன்போடு அரவணைத்து கொண்டார். அவர் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.

நான் காந்தி, காமராஜர், பாரதியாரை எல்லாம் நேரில் பார்த்ததில்லை. கலாமைத்தான் நேரில் பார்த்தேன்.



மகாத்மாவான கலாம் காலத்தில் வாழ்ந்ததை நான் ஆசீர்வாதமாக கருதுகிறேன். மிக சாதாரண எளிமையான குடும்பத்தில் பிறந்து மிகப்பெரிய உயரத்தை அடைந்தவர் கலாம். அவர் மிகப்பெரிய உயரத்திற்கு சென்றாலும் இறுதிவரை எளிமையுடன் வாழ்ந்து காட்டி சென்றிருக்கிறார்.

இவ்வாறு நடிகர் ரஜினிகாந்த் கூறியிருக்கிறார்.