இளைய தளபதி விஜய் தன் ரசிகர்களுடன் கலந்துரையாட டுவிட்டர் வந்தார், பிறகு அதிகாரப்பூர்வமாக இதில் இணைந்தார்.இந்நிலையில் இன்று இவருடைய பக்கத்தில் புலி இசை வெளியீடு குறித்து டுவிட் வந்தது. ஆனால், அதனுடன் [ADMIN] என்ற வார்த்தை குறிப்பிட்டு இருந்தது.
அதாவது விஜய் அந்த டுவிட் செய்யவில்லை, அவருடைய ADMIN தான் அந்த டுவிட் செய்தார் என்பதன் அர்த்தம். ஆனால், வழக்கம் போல் விஜய்யின் எதிர் தரப்பினர் ‘அது எப்படி அப்துல் கலாம் இறுதி சடங்கு நடக்கும் வேலையில் இப்படி படம் சம்மந்தமாக டுவிட் செய்யலாம்’ என்று கேள்வி எழுப்ப ஆரம்பித்து விட்டனர்.