எகிப்திய தலைநகர் கெய்ரோவில் தளபாடத் தொழிற்சாலையொன்றில் இடம்பெற்ற தீ அனர்த்தத்தில் குறைந்தது 25 பேர் பலியாகியுள்ளனர். அத்துடன் மேலும் 22 பேர் தீக்காயங்களாலும் புகையாலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எரிவாயு கொள்கலமொன்றில் ஏற்பட்ட வெடிப்பையடுத்தே இந்தத் தீ அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக நம்பப்படுகிறது.
இந்தத் தீயை 20க்கு மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் சகிதம் பெருந்தொகையான தீயணைப்புப் படைவீரர்கள் போராடி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.