பொதுநலவாய நாடுகள் மாநாட்டை புறக்கணிக்குமாறு மலேசியாவுக்கு அழுத்தம்..!

491

malaysiaஇலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை மலேசிய பிரதமர் பகிஸ்கரிக்க வேண்டும் என அந்நாட்டு பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மலேசிய பாராளுமன்ற உறுப்பினர் எம்.குலசேகரன் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

ஏற்கனவே மலேசியாவில் இடம்பெற்ற இஸ்லாமிய மாநாட்டுக்கு இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. எனினும் அது பலத்த எதிர்ப்புக்களால் விலக்கிக்கொள்ளப்பட்டது.

இந்தநிலையில் இலங்கையில் சிறுபான்மை தமிழர்களின் முஸ்லிம்களின் வணக்கத்தலங்கள் மீது தாக்குதல்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. இதனை தடுக்க இலங்கை அரசாங்கம் உரிய நடவடிக்கையை எடுக்கவில்லை.



எனவே இதனைக் கருத்திற் கொண்டு மலேசிய பிரதமர் பொதுநலவாய நாடுகளின் கொழும்பு மாநாட்டில் பங்கேற்பதை தவிர்த்துக் கொள்ளவேண்டும் என்று குலசேகரன் மலேசிய பாராளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதம் ஒன்றின்போது கோரிக்கை விடுத்துள்ளார்.