தமிழ் படங்களில் நடிக்க அசினுக்குத் தடை..!

471

asinகௌதம் மேனனன் இயக்கும் துருவ நட்சத்திரம் படத்தில் சூர்யா ஜோடியாக அசின் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னையில் ஒரு மழைக் காலம் படத்தில் இருவரையும் ஜோடியாக நடிக்க வைப்பதற்கு ஏற்கனவே கௌதம் முடிவு செய்திருந்தார். ஆனால் அப்படம் நின்று போனது.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

எனவே துருவ நட்சத்திரம் படத்தில் இருவரையும் ஜோடி சேர்க்க முடிவுசெய்துள்ளார். அசின் தற்போது இந்திப் படங்களில் நடித்து வருகின்றார்.

இந்நிலையில் அசின் இப்படத்தில் நடிப்பதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இது குறித்து இந்து மக்கள் கட்சி மண்டல தலைவர் முத்து ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈழத்தமிழர் பிரச்சினையில் நடிகர், நடிகைகள் இலங்கை செல்ல திரையுலக சங்கங்கள் தடை விதித்தன.



ஆனால் அந்த தடையினை மீறி அசின் இந்தி படப்பிடிப்புக்காக இலங்கை சென்றார். எனவே அவரை தமிழ் படங்களில் நடிக்க வைக்க கூடாது என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றோம்.

இந்நிலையில் கௌதம் மேனன் தனது படத்தில் அசினை நடிக்க வைப்பது கண்டிக்கதக்கது. இதை அனுமதிக்க முடியாது. மேலும் தமிழர்கள் உணர்வுகளுக்கு எதிராக கௌதம் மேனன் செயல் படக்கூடாது. அசினை நடிக்க வைத்தால் படப்பிடிப்பை நடத்தவிட மாட்டோம் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.