கப்பல், விமானத்தை பார்த்தாலே மயங்கி விழும் அதிசயப் பெண்!!

464

பிரித்தானியாவில் பெண் ஒருவர் பெரிய பொருட்களை பார்த்தால் பயப்படும் வித்தியாசமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.

பிரித்தானியாவின் லிவர்பூல் பகுதியை சேர்ந்தவர் எமி கர்சன். இவர் மெகாலொபோபியா (Megalophobia) என்ற வித்தியாசமான நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

அதன்படி பெரிய அளவிலான பொருட்களை பார்த்தால் பயந்து சில சமயங்களில் மயங்கிவிடுகிறார்.

இது குறித்து எமி கூறியதாவது, அளவில் பெரிய பொருட்களான விமானம், கப்பல் லொறி ஆகியவற்றை பார்த்தால் என்னையும் அறியாமல் பயப்பட தொடங்கிவிடுவேன்.



அந்த பொருட்களுக்கு திடீரென உயிர் வந்து தலை மற்றும் கால்களுடன் என்னை மிரட்டுவது போல் தோன்றும். இதனால் சில சமயங்களில் மயக்கம் போட்டு விழுந்துள்ளேன்.

எனினும் சில நேரங்களில் விமானம், கப்பல் போன்றவற்றின் புகைப்படங்களை பார்க்காமல் இருக்க முடியவில்லை.

எனது காதலர் பல முறை என்னை எச்சரித்தும் என்னால் இந்த பழக்கத்தை விட முடியவில்லை. எனவே பெரிய பொருட்களை பார்க்கும் போது காதுகளை மூடியும் தலையை குனிந்தபடியும் சென்று விடுவேன்.

இந்த நோயின் கொடுமையே பயம், ஏற்படும் என்று தெரிந்தும் பெரிய பொருட்களின் படங்களை கட்டாயம் பார்த்தாக வேண்டும் என்பதுதான் என்று அவர் தெரிவித்துள்ளார்.

L1 L2