அக்கினியில் சங்கமமாகிய காவியக் கவிஞன் வாலியின் உடல்!!(படங்கள்)

575

15 ஆயிரம் பாடல்களுக்கு மேல் எழுதி திரைப்பட உலகில் சாதனை படைத்த கவிஞர் வாலி 18.07.2013ல் காலமானார்.

அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக சென்னை ராஜா அண்ணாமலைபுரம் கற்பகம் அவென்யூ முதல் தெருவில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டிருந்தது.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

வெள்ளிக்கிழமை திமுக தலைவர் கலைஞர், திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, நடிகர்கள் ரஜினி, விஜயகாந்த், நடிகைகள் குஷ்பு, சுகன்யா, டி.கே.கஜேந்திரன், நடிகர் ஸ்ரீமான், இயக்குநர் அமீர், பாமக முன்னாள் அமைச்சர் ஏ.கே.மூர்த்தி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, இசையமைப்பாளர்கள் இளையராஜா, தேவா, ஸ்ரீகாந்த் தேவா உள்ளிட்ட திரையுலகினர், அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் அஞ்சலி செலுத்தினர். அரசியல் தலைவர்கள் பலர் இரங்கல் செய்தி வெளியிட்டிருந்தனர்,

வெள்ளிக்கிழமை பிற்பகல் அவரது உடல் பெசன்ட் நகரில் உள்ள மின்சார மயானத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
இறுதி ஊர்வலத்தில் கவிஞர் வைரமுத்து, பிறைசூடன், ந.முத்துக்குமார், கோவை தம்பி, கவிஞர் தமிழ்நாடன், பொன்னடியான், நெல்லை ஜெயந்தா உள்ளிட்ட கவிஞர்கள் நடந்தே மயானத்திற்கு சென்றனர். அங்கு அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.



v1 v2 v3 v4 v5 v6