நடிகை ஸ்ருதி தற்கொலை முயற்சி?

552

sruthi

நடிகை ஸ்ருதி, நேற்று தனது வீட்டில் தற்கொலை செய்துகொள்ள முயற்சித்துள்ளார். தற்போது அவர் கவலைகிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிகின்றன.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

பிரபல கன்னட நடிகை ஸ்ருதி, தமிழில் கல்கி என்ற படத்தில் கே.பாலச்சந்தாரல் அறிமுகப்படுத்தப்பட்டார். தொடர்ந்து பல படங்களில் நடித்த அவர் கன்னட திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தார். தற்போது தமிழ் தொலைக்காட்சி நாடகம் ஒன்றிலும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் கன்னட பட இயக்குனர் எஸ்.மகேந்தரை திருமணம் செய்து சில ஆண்டுகள் வாழ்க்கை நடத்தினார். 3 வருடத்துக்கு முன் பிரிந்து விவாகரத்து பெற்றார். பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து செயல்பட்ட அவர், முன்னாள் முதல்வர் எடியூரப்பா பாஜவில் இருந்து விலகி, கர்நாடக ஜனதா கட்சியை தொடங்கியதும், அதில் இணைந்து தீவிர தேர்தல் பிரசாரம் செய்தார்.



சில ஆண்டுகளாக பத்திரிக்கையாளர் சந்திரசேகருடன் பழகி வந்தார். அவர்கள் நட்பு நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டனர். நேற்று ஊடகங்களில் நடிகை ஸ்ருதி தற்கொலை முயற்சி செய்ததாகவும், அவரை கர்நாடக மருத்துமனையில் கவலைகிடமான நிலையில் அனுமதித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. ஸ்ருதியின் வாழ்க்கையில் ஏற்பட்ட ஏமாற்றங்கள் இதற்கு காரணம் என்று யூகிக்கப்பட்டது.

இந்த நிலையில் ஸ்ருதி தற்கொலை செய்துகொள்ளவில்லை என்றும், அவர் சாப்பிட்ட உணவு சரிமானமின்மையால் மயங்கிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. இது குறித்து நடிகை ஸ்ருதி ஊடகங்களுக்கு அளித்துள்ள விளக்கத்தில்,

எனக்கு நிறைய பிரச்சினைகள் இருப்பது உண்மை என்றாலும் தற்கொலை செய்யும் அளவு கோழை நான் இல்லை என்று கூறியுள்ளார்.