அமெரிக்காவின் ஓரிகன் மாகாணத்தில் உள்ள போர்ட்லண்ட் நகரை சேர்ந்தவர் போல் ஸ்டவுட். இவருக்கு ஒரு கார் விற்பனை கம்பனியில் இருந்து நோட்டீஸ் வந்தது.
அதில் நீங்கள் இணைய டிரேடிங் மூலம் ஒரு கார் வாங்கியிருக்கிறீர்கள். அதன் விலை ரூ.13 ஆயிரம் அதை செலுத்திவிட்டு காரை ஓட்டி செல்லுங்கள் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் காரை வாங்கவில்லை என மறுத்தார். பின்னர் தனது கையடக்க தொலைபேசியை பார்த்த போது அதில் இணையம் மூலம் கார் வாங்கியிருப்பது உறுதி செய்யப்பட்டது.
இவர் தனது ஒரு வயது மகளிடம் கையடக்க தொலைபேசியை விளையாட கொடுத்து இருந்தார். அப்போது அவர் தவறுதலாக அழுத்தி உபயோகித்ததில் இச்சம்பவம் நடந்திருப்பது தெரிய வந்தது.
அதை தொடர்ந்து அந்த காரை அவர் வாங்கி விட்டார். தற்போது அதில் தனது மனைவி குழந்தையுடன் வலம் வருகிறார். இவரது குழந்தையின் இணைய விளையாட்டு மூலம் வாங்கிய கார் 1962–ம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட “ஒஸ்டின்–ஹீலே ஸ்பரிட்” ரக கார் ஆகும்.
இது குறித்து போல் ஸ்டூயட் கூறும்போது, ‘‘நல்லவேளை மிக குறைந்த விலையிலான காரை எனது மகள் தேர்வு செய்து இருக்கிறாள். இல்லாவிட்டால் அதற்குரிய பணத்தை என்னால் செலுத்தியிருக்க முடியாது’’ என சிரித்தபடியே கூறினார்.