இப்படியும் காசு புடுங்குறாங்களே.. அலறும் தயாரிப்பாளர்கள்!

509

Anushka

ஒரு படத்தில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள், அந்தப் படம் தொடர்பான புரொமோஷன் விழாக்களில் கலந்துகொள்ள வேண்டும் என்பது எழுதப்படாத விதி. எல்லாவற்றிலும் காசு பார்க்கத் துடிக்கும் மும்பைப் பட உலகம், இதிலும் காசு பார்க்க ஆசைப்பட்டது.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

அதன்படி படத்திற்கான சம்பளப் பத்திரத்தில் கையெழுத்து போடும்போதே, புரொமோஷன் விழாக்களுக்கு வருவதென்றால் தனியாக இவ்வளவு கொடுத்துவிட வேண்டும் என்று கண்டிஷன் போட்டுவிடுவார்கள். இந்த டெக்னிக்கை கோலிவுட்டிலும் சிலர் கொஞ்சம் கொஞ்சமாக அமல்படுத்தத் தொடங்கி உள்ளனர்.

சமீபத்தில் ரிலீஸாகி இருக்கும் “சிங்கம்-2” படத்தில் ஹீரோயினாக நடித்திருப்பவர் அனுஷ்கா. சம்பளம் போக புரொமோஷன் விழாக்களுக்கு வரவேண்டுமானால், தனியாக ஒரு தொகை தரவேண்டும் என அடம்பிடித்தாராம் இவர்.



இயக்குநரும், தயாரிப்பாளரும் எவ்வளவோ கெஞ்சியும் மனம் இறங்கவே இல்லையாம் அனுஷ்கா. பிறகு வேறுவழியில்லாமல் தருவதாக ஒப்புக் கொண்டாராம் தயாரிப்பாளர்.

அனுஷ்கா விமானத்தில் வந்து போனது, சொகுசு ஹோட்டலில் தங்கிய செலவு போக பெரும்தொகையை அழுதாராம் தயாரிப்பாளர். இதைப் பார்த்து சில முன்னணி நடிகர்களும், நடிகைகளும் இப்படி நாமும் கேட்கலாமே என்ற எண்ணத்திற்கு வந்திருக்கிறார்களாம்.