இங்கிலாந்தின் அடுத்த வாரிசு ஆணா? பெண்ணா? – சூடுபிடிக்கும் சூதாட்டம்

672

kate-william

இளவரசர் வில்லியம்ஸூக்கு பிறக்கப்போகும் குழந்தை ஆணா? பெண்ணா? என இடம்பெரும் சூதாட்டங்களில் பெருமளவான பணம் புரள்வதாக தெரிவிக்கப்படுகின்றது. இங்கிலாந்து இளவரசர் வில்லியம்ஸின் மனைவி கேத் தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறார்.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

பிரசவத்துக்காக அவர் மத்திய லண்டனில் உள்ள பட்டிங்டான் செண்ட் மேரிஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவர் கர்ப்பமானதில் இருந்து வில்லியம்ஸ் – கேத் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்வதில் இங்கிலாந்து மக்கள் ஆர்வமாக இருந்து வருகிறார்கள். குறிப்பாக அவர் என்ன சாப்பிடுகிறார் எங்கு போகிறார். அரண்மனையில் எப்படி நடத்துகிறார்கள் என்பன பற்றிய தகவல்களை அறிந்து கொள்வதில் மக்கள் ஆர்வமாகவுள்ளனர்.



கேத்துக்கு குழந்தை பிறக்கும் நேரம் வந்து விட்டது. அவருக்கு வருகிற 13–ம் திகதி குழந்தை பிறக்கும் என்று தகவல் வெளியானது. ஆனால் அதற்கு முன்பே குழந்தை பிறக்கும் வாய்ப்பு இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்தநிலையில் கேத்துக்கு பிறக்கப் போவது ஆணா? பெண்ணா? என்ற ஆவல் ஏற்பட்டுள்ளது. இதைப்பயன்படுத்தி இங்கிலாந்தில் பெரிய அளவில் சூதாட்டமே நடக்கிறது. இளவரசர் தான் பிறப்பார் என்று ஒரு சாராரும், இளவரசிதான் பிறப்பார் என்று ஒரு சாராரும் பணம் கட்டி சூதாட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

இதில் பெரும்பாலானவர்கள் பெண் குழந்தை பிறக்கும் என்று கூறி பணம் கட்டியுள்ளனர். அரண்மனையில் பெண் வாரிசுகள் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் பெண் குழந்தைதான் பிறக்க வேண்டும் என்றும் விருப்பத்தை தெரிவித்துள்ளனர்.
இந்த சூதாட்டத்தில் பெருமளவு பணம் புரள்வதாக லண்டன் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிறக்கப்போகும் குழந்தைக்கு என்ன பெயர் சூட்டுவார்கள் என்றும் தெரிவித்துள்ளனர். பையன் பிறந்தால் அலெக்சாண்ரா என்று பெயர் சூட்டுமாறு பெரும்பாலானவர்கள் தெரிவித்துள்ளனர்.

பெண் பிறந்தால் கேர்லோட், டயானா, எலிசபெத் விக்டோரியா ஆகிய பெயர்களும் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. பெரும்பாலானவர்கள் கேத்தரின் சகோதாரர் ஜேம்ஸ் பெயரைத்தான் குழந்தைக்கு சூட்டுவார் என்றும் பந்தயம் சூட்டியுள்ளனர்.