நீண்ட கண் இமைகளுக்காக கின்னஸ் சாதனை படைக்கத் துடிக்கும் நபர்!!

595

Imai

நகம், தலைமுடி போன்றவற்றை பெரியதாக வளர்ப்பவர்களே தங்கள் பெயர் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறுவதை சாதனையாக நினைக்கும் நேரத்தில், ஒரு அங்குலத்தை தாண்டி வளர்வதற்கு வாய்ப்பே இல்லாத இமை ரோமங்களை மிகவும் சிரமப்பட்டு சுமார் 3 அங்குலம் நீளத்துக்கு வளர்த்ததன் மூலம் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறுவதற்காக உக்ரைன் நாட்டை சேர்ந்தவர் ஒருவர் ஆவலுடன் காத்திருக்கிறார்.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

உக்ரைன் நாட்டை சேர்ந்த வேலரி ஸ்மேக்லி தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதற்காக டயட் எடுக்க ஆரம்பித்தார்.
அதனால் அவரது உடல் கட்டுக்கோப்பாக மாறியதோ இல்லையோ இமை ரோமங்கள் மளமளவென வளர ஆரம்பித்தது. இதனால் ஆச்சர்யமடைந்த வேலரிக்கு தொடக்கத்தில் பொது இடங்களில் போகும்போது தன்னை எல்லோரும் வெறித்து பார்ப்பது சங்கடமாயிருந்தது.

ஆனால் நாளடைவில் வீதியில் அழகான பெண்கள் அவரை மறித்து எப்படி உங்கள் இமை ரோமங்கள் எப்படி இவ்வளவு பெரிதாக இருக்கிறது என்று கேட்டதும் புல்லரித்தது.



இதற்கு பிறகு இமை ரோமத்தை வளர்ப்பதற்காகவே டயட் எடுக்க ஆரம்பித்தார். ஒரு கட்டத்தில், ரோமத்தின் எடை தாங்க முடியாமல் இமை சோர்வுற ஆரம்பித்தது. பார்வையும் சரியாக தெரியவில்லை. இதனால் தனது இமை ரோமங்களை வெட்டிக்கொள்ள முடிவு செய்தார்.

செய்யும் முன்னர் கின்னஸ் புத்தகத்திற்காக தனது இமை ரோமத்தை அளந்து கொடுத்துள்ளார். அவர் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறுவாரா இல்லையா என்பது இன்னும் சில தினங்களில் தெரிய வரும்.

ஆனால், இமை ரோமத்தை வெட்டினாலும், இன்னும் அந்த டயட் இரகசியத்தை மட்டும் சொல்ல மாட்டேன் என்று அடம் பிடிக்கிறார் வேலரி.