வவுனியா கோவில்குளம் பகுதியில் மீண்டும்திருட்டு : நண்பகல் வேளையில் வீடுபுகுந்த கொள்ளையர்கள்!!

746

images (3)

வவுனியா கோவில்குளம் உமாமகேஸ்வரன் வீதியில் நேற்று(16.01.2015) நண்பகல் வேளை  பூட்டியிருந்த வீட்டில் புகுந்த திருடர்கள்  அங்கிருந்த பணம் மற்றும் பொருட்களை களவாடி சென்ற சம்பவம் இடம்பெற்றது .வீட்டிலுள்ளவர்கள்  வெளியே சென்ற சமயம் பார்த்து உள் நுழைந்த திருடர்கள் தமது கைவரிசையை  காட்டி சென்றுள்ளனர் .இது தொடர்பாக  வவுனியா போலீசார்  மோப்ப நாய்களின் உதவியுடன் துப்பு துலக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர் .

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

 கோவில்குளம் பிரதேசத்தில் இரண்டு மூன்று வாரங்களுக்கு முன்னரும்    தொடர்ச்சியாக  திருட்டு சம்பவங்கள் இரவுவேளைகளில்  இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது .மேற்படி சம்பவங்களால் பொதுமக்கள் பகல்வேளைகளிலும் பயத்துடனே தான் வாழவேண்டிய நிலையில் உள்ளதாக திருட்டு நடைபெற்ற இடங்களில் கூடியிருந்த பொதுமக்கள் தெரிவித்துள்ளனர் .