வவுனியா நகரில் சூடுபிடித்துள்ள பொங்கல் பண்டிகை வியாபாரம் : கொள்வனவு செய்ய திரண்டுள்ள மக்கள் கூட்டம்!!(படங்கள்)

874

10934660_945663708786916_368751491_nநாளை கொண்டாடப்படும்  பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று காலைமுதல்  மாலை வரை  வவுனியா நகரில்   பெருமளவிலான பொதுமக்கள் திரண்டு கொள்வனவு  நடவடிக்கைகளில்  ஈடுபட்டுள்ளனர். பொங்கலுக்குரிய  புதிய பானை அகப்பை மற்றும் பொங்கல் பொருட்களான  கரும்பு இஞ்சி மஞ்சள்  மற்றும் பழவகைகள்  பட்டாசுகள் பூந்திரிகள்  முதலியவற்றை முண்டியடித்து கொள்வனவு  செய்வதில் பெரிதும் ஆர்வம் காட்டியிருந்தனர்.

பொங்கல் பண்டிகைக்கு முதல்நாளான இன்று பாடசாலைகளுக்கு  விடுமுறை  அறிவிக்கபட்டிருப்பதால்  பெருமளவிலான பொதுமக்கள் தங்கள் பிள்ளைகளுடன் வவுனியா நகரில் கொள்வனவு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர் .

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

புதிய ஆட்சி  மாற்றத்தின் பின்னரான இந்த பொங்கல் பண்டிகையில்  பொதுமக்கள் தற்போதைய  ஆட்சியாளர்களின்  வருகையும்  அதன்பின்னர்  ஏற்படபோகும்   மாற்றங்கள்  தொடர்பாக  வர்த்தகர்களுடன்  அளவளாவியபடியே  கொள்வனவு  நடவடிக்கையில்  ஈடுபட்டனர் .

வவுனியா நகரிலிருந்து வாசகன்