ஆப்கானிஸ்தானில் தினசரி தீவிரவாதிகளின் வெடிகுண்டு தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் தீவிரவாதிகளுடன் பேச்சு வார்த்தை நடத்த பாசில்அகமது தலைமையில் சமாதான உயர்மட்ட கவுன்சில் அமைக்கப்பட்டுள்ளது. அதில்80உறுப்பினர்கள் உள்ளனர்.
நேற்று காஷ்னி மாகாணத்தில் சமாதான உயர்மட்ட கவுன்சில் தலைவர் பாசில் அகமது காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது ரோட்டோரம் மறைத்து வைத்திருந்த குண்டுகளை தலிபான் தீவிரவாதிகள் வெடிக்க செய்தனர்.
அதில், பாசில்அகமது படுகாயம் அடைந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த தாக்குதலில் அவரது கார் டிரைவர் உயிரிழந்தார்.
நேற்று இது போன்று பல இடங்களில் ரோட்டோரம் மறைத்து வைக்கப்பட்டிருந்த குண்டுகள் வெடித்தன. ஹெல்மண்ட் மாகாணத்தில் நடந்த சம்பவத்தில் 7 ராணுவ வீரர்கள் பலியாகினர். மற்ற இடங்களில் நடந்த தாக்குதல்களில் 7வீரர்கள் கொல்லப்பட்டனர்.
மேலும் நாடு முழுவதும் ராணுவம் நடத்திய பல்வேறு தாக்குதல்களில் தலிபான் தீவிரவாதிகள் 64 பேர் கொல்லப்பட்டனர். 24 மணி நேரத்தில் நடந்த சம்பவங்களில் 14ராணுவ வீரர்களும், 64 தலிபான் தீவிரவாதிளும் ஆக மொத்தம் 78 பேர் பலியாகி உள்ளனர்.
இந்த தகவலை ஆப்கானிஸ் தான் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.