கேட்டதை விட அதிகமாக தமிழகத்திற்கு அதிக காவிரி நீரை வழங்கி விட்டோம் – கர்நாடகா

678

krs_thumb

தமிழகத்திற்கு தேவைப்பட்டதை விட அதிக அளவு காவிரி நீரைத் திறந்து விட்டதாக கர்நாடக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தின் சம்பா மற்றும் குருவை சாகுபடிக்கு காவிரியில் இருந்து போதுமான நீரைத் திறந்துவிடாத கர்நாடக அரசு ரூ.2,500 கோடி நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று அதிமுக அரசு தெரிவித்தது.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

இந்நிலையில் இது குறித்து கர்நாடக நீர் வளத்துறை அமைச்சர் எம்.பி. பாட்டீல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, 2012-2013ம் ஆண்டில் கர்நாடகாவில் வறட்சியால் பாதிக்கப்பட்ட காவிரிப் பகுதியில் உள்ள பயிர்களை வாடவிட்டுவிட்டு தமிழகத்தின் சம்பா மற்றும் குருவை சாகுபடிக்கு தேவைக்கு அதிகமாகவே காவிரி நீர் திறந்துவிட்டதற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளது.

தமிழ்நாடு நஷ்ட ஈடு கேட்டுள்ளது குறித்து எங்களுக்கு நோட்டீஸ் வந்தால் எங்கள் சட்டக்குழுவை வைத்து எங்கள் பதிலை முறையாக தெரிவிப்போம் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார். காவிரி நடுவர் மன்றத்தின் இடைக்கால தீர்ப்பின்படி தமிழகத்திற்கு காவிரி நீர் திறந்துவிடப்படாததால் பயிர்கள் கருகின.



இதனால் கர்நாடக அரசு தமிழகத்திற்கு ரூ.2, 479 கோடி நஷ்ட ஈடு தர வேண்டும் என்று கூறி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.