மது, சிகரெட்டுக்கு டாட்டா சொன்ன செல்வராகவன்!

628

Director Selvaraghavan Photos Pictures Stillsஇயக்குநர் செல்வராகவன் சில நாட்களுக்கு முன்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்குப் பின் தற்போது வீடு திரும்பி இருக்கிறார்.

ஆர்யா நடித்துள்ள “இரண்டாம் உலகம்” பட வேலைகளில் பிஸியாக இருக்கிறார் செல்வராகவன். சில நாட்களுக்கு முன்பு “இரண்டாம் உலகம்” படப்பணிகளில் இருந்த போது நெஞ்சுவலிப்பதாகக் கூற, பதறிப்போய் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள்.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இதயத்தில் சில பிரச்னைகள் இருப்பதாகக் கூறி உள்ளனர். அதோடு வயிறு தொடர்பான தொற்றுநோயும் ஏற்பட்டுள்ளதாகக் கூறி இருக்கின்றனர்.

இதுபற்றி டிவிட்டரில் தெரிவித்துள்ள செல்வராகவன் மனைவி, “மிகப்பெரிய அபாயம் எதுவும் இல்லை. கடவுளுக்கு நன்றி” என குறிப்பிட்டுள்ளார்.



மது, சிகரெட் இரண்டையும் தொடவே கூடாது என மருத்துவர்கள் தடை விதித்துள்ளனர். “மதுவும், சிகரெட்டும் இல்லாமல் எப்படி அருமையாக இருக்கிறேன் என்பதை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை” என டுவிட்டரில் தட்டியிருக்கிறார் செல்வராகவன்.

சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பியுள்ள செல்வராகவன், மறுபடியும் “இரண்டாம் உலகம்” படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். ஓகஸ்ட்டில் ரிலீஸ் செய்யும் வகையில் வேலைகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.