வினோத கழிப்பறை உணவகம்!!

666

சீனாவில் விசித்திரமான வடிவமைப்பில் கழிப்பறை உணவகம் தொடங்கப்பட்டுள்ளது மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

சீனாவின், தையுயானின் ஷாங்ஜி மாகாணத்தில் தொடங்கப்பட்டுள்ள கழிப்பறை உணவகத்தில், மேற்கத்திய கழிப்பறை வடிவில் நாற்காலிகளும், கை கழுவும் வாஷ்பேசினைப் போன்று மேஜையும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

கழிப்பறையுடன் கூடிய குளியலறையில் நுழைவது போன்ற உணர்வு ஏற்படும் வகையில், தரை மற்றும் சுவர்களுக்கு, பாத்ரூம் டைல்ஸ்களும், கதவுகளில் கழிப்பறை பேப்பர் மற்றும் குழாய்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இந்த உணவகத்தில் பரிமாறப்படும், நுாடுல்ஸ், இறைச்சி, சைவ உணவுகளுடன், சுருண்ட பிரவுன் நிற பின்னல் போன்ற ஐஸ்கிரீம்களும் பிரபலமானவை.



பார்ப்பதற்கு மனிதக் கழிவுகள் போல தோற்றமளிக்கும் இவை, கழிப்பறை வடிவிலான பாத்திரங்களில் பரிமாறப்படுகிறது.

சீனாவின் பீஜிங், ஷாங்காய் மற்றும் ஹாங்ஜூ நகரங்கள் மட்டுமல்லாமல், கொரியா, ஜப்பான் நாடுகளிலும் கழிப்பறை வடிவிலான காபி ஷொப்கள் திறக்கப்பட்டுள்ளன.

சீனாவில் இயங்கும் உணவகங்களில் கழிப்பறை வசதி கிடையாது, இங்கு வரும் வாடிக்கையாளர்கள் உணவகத்திற்கு வெளியில் உள்ள பொதுக் கழிப்பறையைத்தான் பயன்படுத்த வேண்டும்.

புதிதாக திறக்கப்பட்டுள்ள கழிப்பறை உணவகங்களுக்கு முதன் முறையாக வருபவர்கள் ஏராளமான கழிப்பறைகளைக் கண்டு ஆச்சரியமடைகின்றனர்.

40 41 42 43 44 45