காதல் தோல்வியால் தூக்கில் தொங்கிய நடிகை : காதலன் யார்?

442

suமும்பையில் புதுமுக இந்தி நடிகை ஒருவர் காதல் தோல்வியால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். புதுமுக நடிகை சைய்யாம் கன்னா (28). தி ஹான்டட் ஹவுஸ் படத்தில் நடித்தவர். அடுத்ததாக அவர் நடித்த தி லாஸ்ட் ஹாரர் படம் வெளியாக உள்ளது.

மும்பையில் வசித்து வந்த சைய்யாம் கன்னா கடந்த 30ம் திகதி தனது சகோதரி ரியாவிடம் கடைக்கு சென்று சில பொருட்கள் வாங்கி வருமாறு கூறியுள்ளார். ரியா கடைக்கு செல்லும் முன்பு அவரிடம் எனக்கு உன்னை மிகவும் பிடிக்கும், நான் தூங்கப் போகிறேன், அதனால் என்னை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று சைய்யாம் தெரிவித்துள்ளார். கடையில் இருந்து திரும்பி வந்த ரியா சைய்யாமின் அறையில் இருந்து ராக்ஸ்டார் பட பாடல் ஓடுவதை கேட்டுள்ளார். கதவு சாத்தியிருந்ததால் சைய்யாம் தூங்குகிறார் என்று ரியா நினைத்துக் கொண்டார்.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

ஆனால் அறைக்குள் சென்று பார்த்தபோது அவர் மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து ரியா கூறுகையில், என் சகோதரி பிரபல நடிகர் ஒருவரின் மகனை காதலித்து வந்தார். ஆனால் அவர் சைய்யாமை விட்டு விலகத் தொடங்கினார் என்றும் அவர் தான் இந்த தற்கொலைக்கு காரணமாக இருக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

சைய்யாம் தான் எழுதி வைத்த கடிதத்தில் தனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை என்று தெரிவித்துள்ளார். அவர் கடைசியாக தனது காதலருக்கு தான் போன் செய்துள்ளார். இது தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.