நாயை திருமணம் செய்த பெண் : ஓர் வினோத சம்பவம் (வீடியோ)

997

இந்தியாவில் இளம் பெண் ஒருவர் கெட்ட தோசங்களை போக்குவதற்காக வெறி பிடித்த நாயை திருமணம் செய்து கொண்டுள்ளது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்தியாவின் கிழக்கு பகுதியை சேர்ந்த மங்கிலி (18) என்ற பெண்ணுக்கு கெட்ட தோசங்கள் இருப்பதால், திருமண செய்து கொண்டால் அவரின் கணவருக்கு அழிவு என்றும் குடும்பத்தில் குழப்பம் நடக்கும் எனவும் ஜாதகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

இந்நிலையில் இதனை அடுத்து கிராமத்தில் உள்ள முதியவர்களின் அறிவுரைப்படி இப்பெண், நாய் ஒன்றை திருமண செய்து கொண்டால் தோசம் கழிந்து விடும் என்பதால், இவரது குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள் முன்னிலையில் சேறு என்ற நாயுடன் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

நாயை திருமணம் செய்து கொள்ள சிறிதும் விரும்பாத மங்கிலி, தனது தோசங்கள் கழிந்து விடும் என்ற நம்பிக்கையில் திருமணம் செய்து கொண்டுள்ளார்.



தற்போது இவரின் தோசங்கள் நாய்க்கு, சென்று விடும் என்பதால் பின்னர் இவர் திருமணம் செய்து கொண்டால் நன்றாக வாழ்வார் என அப்பகுதி மக்கள் நம்புகின்றனர்.

D1 D2 D3 D4 D5 D6