ராட்சத கைகளுடன் வினோத சிறுவன் : திகைப்பில் மருத்துவர்கள்!!

1002

இந்தியாவில் எட்டு வயது சிறுவன் ஒருவனுக்கு தலையை விட கைகள் பெரிதாக உள்ளதால் மருத்துவர்களே செய்வதறியாது குழம்பியுள்ளனர்.

கலீம் என்ற 8 வயது சிறுவன் பிறக்கும்போதே இயல்பான குழந்தைகளின் விரல்களை விட இரு மடங்கு பெரிதாக விரல்கள் இருந்துள்ளது.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

இந்நிலையில், நாளுக்கு நாள் அவனது விரல்களின் வளர்ச்சி பெரிதாகியதால், உள்ளங்கையிலிருந்து நடுவிரலின் முடிவு வரை கணக்கிட்டால் 13 இஞ்ச் அளவுக்கு கைகள் வளர்ச்சியடைந்துள்ளது தெரியவந்துள்ளது. இதனால் உடைகளை அணிந்து கொள்வதற்கும் மற்ற செயல்களை செய்வதற்கும் இச்சிறுவன் சிரமப்படவேண்டியுள்ளது.

மேலும், தன்னை பார்த்து மற்றவர்கள் பயப்படுவதால் தனது வாழ்க்கையே தனிமையில் கழிவதாக சிறுவன் கலீம் சோகத்துடன் தெரிவித்துள்ளான். கலீமின் பெற்றோர் 1500 ரூபாய் மட்டுமே மாத வருமானமாக சம்பாதிப்பதால், தங்கள் சக்திக்கு ஏற்ற வகையில் அவனது சிகிச்சைக்கு செலவு செய்துவருகின்றனர்.



அவனைப்பற்றி பெற்றோர் கூறுகையில், அவனை பரிசோதிக்கும் மருத்துவர்கள் மிகவும் குழம்பிப்போய்விடுவதாக தெரிவித்துள்ளனர்.

மருத்துவர் ஒருவர் கூறுகையில், கைகளின் வளர்ச்சியை தவிர்த்து பார்த்தால் கலீம் நல்ல நலத்துடன் இருக்கிறான். அவன் லிம்பாஞ்சியோமா அல்லது ஹமார்டோமா என்ற உடலின் குறிப்பிட்ட பாகத்தில் அதிகப்படியான வளர்ச்சியை தரும் நோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவனது பெற்றோர், தங்கள் மகனுக்கு என்றாவது ஒரு நாள் நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையில் காத்திருப்பதை தவிர வேறு வழியில்லை என்று தெரிவித்துள்ளனர்.

B1 B2 B3 B4 B5