ஊர் ஊராகச் சென்று திருமணம் செய்துகொள்ளும் வினோத காதலர்கள்!!

610

பிரித்தானியாவை சேர்ந்த காதலர்கள் 66 நாடுகள் சுற்றி 66 திருமணங்கள் செய்துள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

பிரித்தானியாவை சேர்ந்த லிசா மற்றும் அலெக்ஸ் ஆகியோர் 2008ம் ஆண்டிலிருந்து கடந்த 8 வருடங்களாக இணை பிரியா நண்பர்களாக இருந்துள்ளனர். பின்னர் 2011ம் ஆண்டு முதல் காதலர்களாக ஒரே வீட்டில் வாழ்ந்த இவர்கள் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர்.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

இந்நிலையில் இவர்கள் இருவரும் தங்களது வீட்டை வாடகைக்கு விட்டுவிட்டு தங்கள் உடமைகளை விற்று வந்த பணத்தில் சுற்றுலா செய்ய முடிவு செய்துள்ளனர்.

இதனை அடுத்து இவர்கள் இருவரும் 66 நாடுகள் சென்று அந்நாட்டின் பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து கொண்டுள்ளனர். இவர்கள் இதுவரை 66 முறை திருமணம் செய்து கொண்டாலும், ஒருமுறை கூட சட்டப்படி திருமணம் செய்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடதக்கது.



இவர்கள் உலகில் பல இடங்களில் திருமணம் செய்து கொண்டு பின்னர் தங்களுக்கு பிடித்த இடத்தில் மீண்டும் சட்டப்படி திருமணம் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

W01 W1 W2 W3 W4 W5 W6