இலங்கையில் தங்கத்தை இறக்குமதி செய்ய அனுமதியில்லை என அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கத்தின் செயலாளர் இராமன் பாலசுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.
ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், உலக சந்தையைக் கருத்திற் கொண்டே இலங்கையில் தங்க விலை நிர்ணயிக்கப்படுகிறது.
தங்கத்தை இறக்குமதி செய்வதற்கு இலங்கையில் அனுமதி இல்லை. பொருளாதார பிரச்சினை காரணமாக எந்தவொரு அரசாங்கம் ஆட்சியமைத்தாலும் தங்கத்தை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் விலையேற்றம் காரணமாக தங்க வியாபாரம் தற்போது வீழ்ச்சியில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.