உள்ளூராட்சி தேர்தல் விடுமுறை : பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவிப்பு!!

457

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போது தொழிலாளர்களுக்கு விடுமுறை வழங்குவது குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

குறித்த அறிக்கையின் படி, தொழிலாளர் ஒருவர் வாக்களிப்பதற்க்காக விடுமுறையை கோரினால், அவருக்கு குறைந்தபட்சம் இரண்டு மணி நேர பணி ஊதியத்துடன் கூடிய விடுமுறையை வழங்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த விடுமுறை, தற்காலிக தொழிலாளர்கள் உட்பட அனைத்து தொழிலாளர்களுக்கும் பொருந்தும். அத்துடன், இது தொழிலாளர்களின் வழக்கமான விடுமுறை உரிமைகளுக்கு மேலதிகமானது எனவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.



இதேவேளை, தொழிலாளரின் பணியிடம் மற்றும் வாக்குச்சாவடிக்கு இடையிலான தூரத்தை அடிப்படையாகக் கொண்டு அவர்களுக்கான விடுமுறை காலம் தீர்மானிக்கப்படும்.

இதன்படி, 40 கிலோமீட்டர் அல்லது அதற்கு குறைவாக இருப்பின் அரை நாள் விடுமுறையும் 40 முதல் 100 கிலோமீட்டருக்கு இடைப்பட்ட தூரமாக இருந்தால் ஒரு நாள் விடுமுறையும் 100 முதல் 150 கிலோமீட்டருக்கு இடைப்பட்ட

தூரமாக இருந்தால் 11/2 நாட்கள் விடுமுறையும் 150 கிலோமீட்டருக்கு அதிகமாக இருப்பின் 2 நாட்கள் விடுமுறையும் வழங்கப்பட வேண்டும்.