பாடசாலையில் திடீரென உயிரிழந்த மாணவி : தமிழர் பகுதியில் சோகம்!!

1005

மட்டக்களப்பு கிரான்குளம் பாடசாலை ஒன்றில் வகுப்பறையில் 16 வயது மாணவி ஒருவர் மயங்கி வீழ்ந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

இச் சம்பவம் இன்று (25) பகல் 12.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிசார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் கிரான்குளம் 8 பிரிவு அமரசிங்க வீதியைச் சேர்ந்த க.பொ.த சாதாரண தரத்தில் கல்விகற்றுவரும் 16 வயதுடைய இராஜன் வினோஜினி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.



கிரான் குளம் விநாயகர் மகா வித்தியாலயத்தில் கல்விகற்றுவரும் குறித்த மாணவி வழமைபோல இன்று பாடசாலைக்கு சென்று கற்றல் நடவடிக்கையில் ஈடுபட்டுவந்த நிலையில் வகுப்பறையில் திடீரென மயங்கி வீழ்ந்துள்ளார்.

இதனையடுத்து மாணவியை செட்டிபாளையம் பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த மாணவியின் சடலம் வைத்தியசாலைய பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.