எதிர்வரும் மே மாதம் நடைபெற்வுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் நாடளாவிய ரீதியில் இன்றையதினம் ஆரம்பமாகியுள்ளது. அந்தவகையில் தபால் மூலம் வாக்களிப்பதற்காக 24, 25, 28, 29 ஆகிய தினங்களை தேர்தல் ஆணைக்குழு ஒதுக்கியுள்ளது.
இதனையடுத்து வவுனியா மாவட்டத்தில் இன்று (24.04.2025) காலை 8.30 மணிக்கு ஆரம்பமாகிய வாக்களிப்பு செயற்பாடுகள் சுமூகமாக நடைபெற்று வருகிறது.
வவுனியா தலைமை பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் மாவட்டசெயலகம் உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், இராணுவத்தினர், ஆசிரியர்கள் இன்றையதினம் தமது தபால்வாக்குகளை அளித்திருந்தனர்.
இதேவேளை வவுனியா மாவட்டத்தில் தபால் மூலம் வாக்களிப்பதற்கு 5550 பேரும், முல்லைத்தீவில் 3807 பேரும் மன்னாரில் 3792 பேருமாக வன்னி தேர்தல் மாவட்டத்தில் 13149 பேர் தபால் மூலம் வாக்களிப்பதற்கு தகுதிபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.