இலங்கையில் இருந்து இந்தியாவுக்குக் கடத்த முயன்ற 8 கிலோகிராம் தங்கம் மன்னார் கடற்பரப்பில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
மன்னார் கடற்பரப்பில் நேற்று இரவு சந்தேகத்துக்கிடமாகப் பயணித்த கட்டுமரத்தில் மிகவும் சூட்சுமமாக மறைத்து எடுத்துச் செல்லப்பட்ட தங்கமே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளது.
சட்டவிரோத கடற்றொழிலுக்கு பயன்படுத்தப்படும் டைனமற் போன்று தயாரிக்கப்பட்டு எடுத்துச் செல்லப்பட்ட 8.5 கிலோகிராம் எடை கொண்ட தங்கத்தையே கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
தங்கத்தைக் கடத்திச் சென்ற மன்னாரைச் சேர்ந்த இருவரும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.