அம்பாறையில் மின்னல் தாக்கி ஒருவர் பரிதாபமாக மரணம்!!

235

வயலில் வேலையில் ஈடுபட்ட வேளை மின்னல் தாக்குதலில் உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செனவட்டை பிரதேசத்தில் மின்னல் தாக்கி உயிரிழந்தவர் தொடர்பில் பொதுமக்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றிற்கமைய நேற்று (18) மாலை குறித்த சடலம் மீட்கப்பட்டது.



இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் 1 பிள்ளையின் தந்தையான பிரதேசத்தைச் சேர்ந்த 27 முஹமட் முஸ்தபா முஹமட் சியாம் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மேலும் குறித்த நபர் மற்றுமொரு நபருடன் வேலையின் நிமித்தம் வயலுக்கு சென்ற நிலையில் இச்சம்பவம் இடம்பெற்றிருந்தது.

இதன் போது உயிரிழந்தவரின் அருகில் வயல் வேலையில் ஈடுபட்டவர் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு சம்மாந்தறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

சம்மாந்துறை நீதிமன்ற நீதிவான் கட்டளையின் பிரகாரம் பிரதேச மரண விசாரணை அதிகாரி அப்துல் ஹமீட் அல் – ஜவாஹிர் சம்பவ இடத்திற்கு வருகை தந்து பார்வையிட்டார்.

பின்னர் குறித்த சடலம் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு மரண விசாரணையின் பின்னர் மின்னல் தாக்கத்தினால் மரணம் சம்பவித்துள்ளதாக குறிப்பிட்டு உறவினர்களிடம் சடலம் கையளிக்கப்பட்டது.