ஹபரனை பகுதியில் வான் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த விபத்தானது இன்று (19.04.2025) காலை இடம்பெற்றுள்ளது.
கொழும்பு கட்டு நாயக்க விமான நிலையத்தில் இருந்து கிண்ணியா நோக்கி பயணித்த வான் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்து சம்பவத்தில் வான் சாரதி உட்பட சிறுவர்களும் பலத்த காயங்களுக்கு உள்ளாகி தம்புள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
மேலும், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹபரனை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.