ரூ.1,000க்கு பாம்பு ஒன்றை வாங்கி வந்து, கணவனை கடிக்க விட்டு கொலைச் செய்து மொத்த மாநிலத்தையும் அதிர செய்திருக்கிறார் இளம்பெண் ஒருவர்.
சமீபத்தில் உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்து ட்ரம்மில் கான்கிரீட் போட்டு மூடிய சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இப்போது அதே மீரட்டில் மற்றொரு கணவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இம்முறை மனைவி தனது காதலனுடன் சேர்ந்து கணவரை பாம்பினை கடிக்க வைத்து கொலை செய்துள்ளர். 10 முறை பாம்பினை கொண்டு கணவனை கடிக்க வைத்திருக்கும் கொடூரச் செயலை மனைவி செய்திருப்பதாக தெரிகிறது.
மீரட்டில் வசித்து வரும் அமித்தை கொலை செய்த விவகாரம் குறித்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் அமித்தின் உடல் கட்டிலில் கிடப்பதையும், விஷப் பாம்பு அவரை பலமுறை கடிப்பதையும் காண முடிகிறது. போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த நிலையில், அமித் விஷம் ஏறி மரணமடைந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சந்தேகத்தின் அடிப்படையில் அமித்தின் மனைவி ரவிதாவை போலீசார் கைது செய்து விசாரித்தனர். பின்னர் ரவிதா தனது குற்றத்தை ஒப்புக்கொண்டு பகீர் வாக்குமூலம் அளித்திருக்கிறார்.
அந்த வாக்குமூலத்தில், தனது காதலன் அமர்தீப்புடன் சேர்ந்து கணவன் அமித்தைக் கொலை செய்ததாக ரவிதா ஒப்புக் கொண்டுள்ளார்.
கணவரை கொலை செய்வதற்காக ரவிதா ரூ.1,000 கொடுத்து ஒரு பாம்பை வாங்கியதாகவும், அதனை வைத்து அமித்தைக் கொன்றதாகவும் தெரிகிறது.
ரவிதாவும் அமர்தீப்பும் சேர்ந்து முதலில் அமித்தை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். இதன் பிறகு அமித்தை கொன்றதை மறைக்க, பாம்பை கொண்டு கடிக்க வைப்பது வைத்து வீடியோ எடுத்துள்ளனர்.
அதன்படி, தங்களை காப்பாற்றிக் கொள்ள பாம்பு கடித்து அமித் இறந்தார் என தவறான தகவலை பரப்பி விட்டுள்ளனர். போலீசாரின் சந்தேகத்தின் பேரில் விசாரணைக்கு அழைக்கப்பட்ட இருவரும் சிக்கிக் கொண்டதாக தெரிகிறது.