வயலுக்கு சென்ற இளம் குடும்பஸ்தருக்கு நேர்ந்த விபரீதம் : தமிழர் பகுதியில் சோகம்!!

1028

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செனவட்டை பிரதேசத்தில் வயலில் வேலை செய்து கொண்டிருந்தபோது மின்னல் தாக்கி உயிரிழந்தவரின் உடல், பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

பொதுமக்களிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில், நேற்று (18) மாலை குறித்த உடல் மீட்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்டவர், ஒரு பிள்ளையின் தந்தையான, சம்மாந்துறை, செந்நெல் கிராமம்-2 பகுதியைச் சேர்ந்த 27 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.



குறித்த நபர், மற்றொரு நபருடன் வேலை நிமித்தம் வயலுக்கு சென்றிருந்தபோது இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

இதன்போது, உயிரிழந்தவரின் அருகில் வயல் வேலையில் ஈடுபட்டிருந்த மற்றொரு நபர் காயமடைந்து, சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சம்மாந்துறை நீதிமன்ற நீதவானின் உத்தரவின்படி, பிரதேச மரண விசாரணை அலுவலர் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்ட பின்னர், உடல் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

மரண விசாரணையின் பின்னர், மின்னல் தாக்கத்தால் மரணம் நிகழ்ந்ததாக உறுதிப்படுத்தப்பட்டு, உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பாக சம்மாந்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.