வவுனியாவில் காட்டு யானைகள் அட்டகாசம் :தென்னைப் பயிர்கள் சேதம் : மக்கள்சிரமம்!!

564

வவுனியா வேலங்குளம் கோவில்புளியங்குளம் கிராமத்தில் நேற்றயதினம் இரவு உட்புகுந்த காட்டு யானைகள் காய்க்கும் நிலையில் இருந்த பெருமளவு தென்னை பயிர்களை சேதமாக்கிச்சென்றுள்ளது.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

குறிப்பாக வேலங்குளம் கிராம சேவையாளர் பிரிவிற்குட்பட்ட மடுக்குளம், கோவில்மோட்டை, செங்கற்படை, சின்னத்தம்பனை சிவநகர், குஞ்சுக்குளம், கோவில் புளியங்குளம் போன்ற கிராமங்களுக்குள் அண்மையநாட்களில் தொடர்ச்சியாக செல்கின்ற காட்டு யானைகள் விவசாய நிலங்கள் மற்றும் தோட்டபயிர்களை சேதமாக்கிச் செல்கின்றது.



நேற்று இரவும் குறித்த கிராமங்களுக்குள் உட்புகுந்த யானைகள் காய்க்கும் நிலையில் இருந்து தென்னைபயிர்களை நாசமாக்கிச்சென்றுள்ளது.

இவ்வாறான சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் நிலையில் எமக்கான தீர்வை எந்த ஒரு அதிகாரிகளும் இதுவரை முன்வைக்கவில்லை என பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிப்பதுடன் எமது கிராமத்தை சுற்றியானை வேலியைஅமைத்து தருமாறு பல்வேறு தரப்பிடமும் கோரிக்கை விடுத்துள்ளோம்.ஆனால் இதுவரை கிடைக்கவில்லை என கிராமமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.