பிரித்தானியாவில் தந்தையை கொடூரமாக கொலை செய்த இளைஞன்!!

300

பிரித்தானியாவில் கத்தியால் தாக்கி சொந்த தந்தையை இளைஞர் ஒருவர் கொலை செய்துள்ளார். அவரது புகைப்படங்களை அந்நாட்டு பொலிஸார் வெளியிட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பான தகவல்களையும் வழங்கியுள்ளனர்.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

அந்த தாக்குதல் சம்பவத்தில் 11 வயது சிறுவனும் பெண் ஒருவரும் காயங்களுடன் தப்பியதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவின் பிரைட்டன் பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் 57 வயதான எமாத் சமீர் போட்ரோஸ் என்பவரை 19 வயது ஃபேபியோ போட்ரோஸ் என்ற இளைஞர் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.



தொடர்புடைய 19 வயது இளைஞர் விசாரணைக்காக லூயிஸ் கிரவுன் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டார். இந்த கொடூர சம்பவத்தைத் தொடர்ந்து போட்ரோஸ் மீது கொலை மற்றும் இரண்டு கொலை முயற்சி வழக்குகள் பதியப்பட்டுள்ளன.

அத்துடன், மூன்று படுக்கையறைகள் கொண்ட அந்த குடியிருப்பிலிருந்து உரத்த அலறல் மற்றும் கூச்சல் சத்தம் கேட்டதாக அக்கம் பக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தின் போது 11 வயது சிறுவன் அப்பகுதி மக்களை பொலிசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டாமென கெஞ்சியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் எமாத் தலையில் பலட்த காயங்களுடன் மீட்கப்பட, சிறிது நேரத்திலேயே அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. அந்த குடியிருப்பில் இருந்து 57 வயது பெண்மணி ஒருவரும் 11 வயது சிறுவனும் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.