ட்ரம்பின் வரி விதிப்பால் பாரிய ஆபத்தில் சிக்கவுள்ள இலங்கையின் ஆடை உற்பத்தி!!

190

அமெரிக்கா விதித்துள்ள புதிய வரி இலங்கையின் பொருளாதாரத்தில் எதிர்காலத்தில் மிகவும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறையின் பேராசிரியர் வசந்த அதுகோரல குறிப்பிட்டுள்ளார்.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

12% ஆக இருந்த வரி விகிதம் இப்போது 40% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது, ​​இலங்கை மீது விதிக்கப்படும் வரி விகிதம் மிக அதிகமாக காணப்படுகின்றது. இந்த சூழ்நிலை இலங்கையின் ஏற்றுமதியில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.



இலங்கையின் ஏற்றுமதியில் 25% க்கும் அதிகமானவை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன என்பது எங்களுக்குத் தெரியும்.

குறிப்பாக, ஜவுளி மற்றும் ஆடைகள் அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன, மேலும் அவை அமெரிக்காவில் அதிக கேள்வியை கொண்டுள்ளன.

இந்தக் புதிய வரி விதிப்பு இலங்கையின் ஏற்றுமதியைக் கடுமையாகப் பாதிக்கக்கூடிய வழிகள் உள்ளன. ஏற்றுமதி வருவாய் கணிசமாகக் குறையக்கூடும்.

மேலும், ஏற்றுமதிகள் இப்படி சரிந்தால், எதிர்காலத்தில் இலங்கையில் ஆடை உற்பத்தித் தொழிலில் ஈடுபட்டுள்ள ஏராளமானோரின் வேலைகள் ஆபத்தில் சிக்க வாய்ப்புள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார்.