முச்சக்கரவண்டி – லொறி மோதி விபத்து : தாய், மகன் படுகாயம்!!

201

நாத்தாண்டி – தங்கொட்டுவ வீதியில் தங்கொட்டுவ, மாவத்தகம பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் தாய் மற்றும் மகன் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை (23.03) காலை இடம்பெற்றுள்ளது.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கரவண்டி ஒன்று முன்னால் பயணித்த லொறியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த தாய் மற்றும் மகன் படுகாயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.