பதுளை – பண்டாரவளை வீதியில் விபத்து : நால்வர் காயம்!!

101

பதுளை – பண்டாரவளை வீதியில் தோவ பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் நால்வர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை (23) இடம்பெற்றுள்ளது.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

தனியார் பஸ் ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த சக்கரமொன்றிலிருந்து காற்று வெளியேறியதால், சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் முன்னால் பயணித்த வேன் மற்றும் முச்சக்கரவண்டியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் நால்வர் காயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.