வவுனியா சிறைச்சாலையில் இருந்து ஒருவர் தப்பியோட்டம்!!

1095

வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நபர் ஒருவர் இன்று (22.03) தப்பி ஓடியுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

வவுனியாவில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிசாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட நிலையில், குறித்த நபருக்கு விளக்கமறியல் வழங்கப்பட்டது.

இந்நிலையில் வவுனியா சிறைச்சாலையில் விளக்கமறியல் வைக்கப்பட்ட நபரே இவ்வாறு தப்பி ஓடியுள்ளார். குறித்த நபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை வவுனியா சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் வவுனியா பொலிசார் ஆகியோர் மேற்கொண்டு வருகிறார்கள்.