காதலால் பறிபோன 20 வயது யுவதியின் உயிர் : 21 வயது இளைஞன் கைது!!

559

வென்னப்புவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெற்கு வலய பகுதியில் உள்ள வீடொன்றில் நபரொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி பெண்ணொருவரைக் கொலை செய்த சம்பவம் நேற்று (18) இடம்பெற்றுள்ளது.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

உயிரிழந்தவர் தெற்கு வலய பகுதியைச் சேர்ந்த 20 வயதுடையவராவார். பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில், காதல் விவகாரம் தொடர்பான தகராறு காரணமாக இந்தக் கொலை நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

காதல் விவகாரம்



சம்பவம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மாரவில பகுதியைச் சேர்ந்த 21 வயதுடையவராவார். உயிரிழந்தவரின் சடலம் நீர்கொழும்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொரடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.