வவுனியாவில் நான்கு சபைகளில் போட்டியிடுவதற்காக கட்டுப்பணம் செலுத்திய ஐனநாயக தேசிய கூட்டணி!!

1295

வவுனியா மாநகரசபை உள்ளிட்ட நான்கு சபைகளில் போட்டியிடுவதற்காக ஜனநாயக தேசிய கூட்டணி வவுனியா மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் இன்று (17.03.2025) கட்டுப்பணம் செலுத்தியது.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை கட்டுப்பணம் செலுத்தமுடியும் என தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது.



அதற்கமைவாக, வவுனியா மாவட்டத்தின் வவுனியா மாநகரசபை, வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை, வெண்கலசெட்டிகுளம் பிரதேச சபை, வவுனியா வடக்கு பிரதேசசபை ஆகிய உள்ளூராட்சி மன்றங்களில் குறித்த கூட்டணி போட்டியிடவுள்ளது.

அதற்கான கட்டுப்பணத்தை ஸ்ரீ தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் ப.உதயராசா தலைமையிலான குழுவினர் செலுத்தியிருந்தனர்.