வவுனியாவில் மூன்று சபைகளிலும் போட்டியிட கட்டுப்பணம் செலுத்திய மக்கள் போராட்ட முன்னணி!!

742

வவுனியா மாநகரசபை உள்ளிட்ட மூன்று சபைகளிலும் போட்டியிட மக்கள் போராட்ட முன்னணி இன்று (17.03.2025) வவுனியா மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகத்தில் கட்டுப்பணம் செலுத்தியது.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை கட்டுப்பணம் செலுத்த முடியும்.



அதற்கமைவாக, வவுனியா மாவட்டத்தின் வவுனியா மாநகரசபை, வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை, சிங்கள பிரதேசசபை ஆகிய உள்ளூராட்சி மன்றங்களில் குறித்த முன்னணி போட்டியிடவுள்ளது.

அதற்கான கட்டுப்பணத்தை அந்த அமைப்பின் வன்னி மாவட்ட முக்கியஸ்தர் என்.பிரதீபன் மற்றும் காமினி உட்பட முக்கியஸ்தர்கள் செலுத்தியிருந்தனர்.