மகனுக்கு தந்தை செய்த கொடூரம் : உயிர் தப்பிய மனைவி!!

723

பலாங்கொடையில் தந்தை ஒருவர் பல்கலைக்கழக மாணவனான தனது மகனின் தலையில் தடியால் தாக்கியதுடன் தந்தை விஷம் அருந்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

நேற்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இதனால் இருவரும் பலாங்கொடை ஆதார மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டதாக பலாங்கொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர் தனது மனைவியையும் கத்தியால் தாக்கியதாகவும், எனினும் அவர் அதிலிருந்து தப்பியதாக தெரிய வருகிறது. குறித்த தந்தை, பல்கலைக்கழகத்தில் படித்து வரும் தனது 23 வயது மகனை,



முற்றத்தில் படித்துக் கொண்டிருந்தபோது, ​​தடியால் தலையில் தாங்கியதாக தெரிய வருகிறது. பலாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.