வடக்கு கிழக்கு மாகாணங்களில் சுதந்திரதினத்தினை கரிநாளாக அனுஸ்ரித்து வருகின்ற இந்நிலையில் வவுனியா நகர் முழுவதும் தேசிய கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன.
வவுனியா ஏ9 வீதியின் இரு பகுதிகளிலும் , மணிக்கூட்டு கோபுரம் , வைத்தியசாலை சுற்றுவட்டம் ஆகிய பகுதிகளில் இலங்கையின் தேசிய கொடி பறக்கவிடப்பட்டுள்ளன.
சுதந்திரதினத்தினை கரிநாளாக அனுஸ்ரித்து யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் உட்பட வடக்கு மாகாணத்தின் சில மாவட்டங்களில் கறுப்புக்கொடிகள் கட்டப்பட்டுள்ளமையுடன் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் ஏற்பாட்டில் வடக்கில் கிளிநொச்சியிலும் கிழக்கில் மட்டக்களப்பிலும் கரிநாள் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.