வவுனியாவில் போலி ஆவணம் மூலம் அரச காணியை விற்பனை செய்து மோசடி : அரச உத்தியோகத்தர் ஒருவர் கைது!!

3022

அரச காணி ஒன்றினை போலி ஆவணம் தயாரித்து 22 மில்லியன் ரூபாய்க்கு விற்னை செய்த குற்றச்சாட்டில் வவுனியா மாவட்ட செயலகத்தில் பணியாற்றும் உத்தியோகத்தர் ஒருவர் குற்றப் புலனாய்வுப் பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

வவுனியா, பம்பைமடு பகுதியில் உள்ள அரச காணி ஒன்றினை போலி ஆவணங்கள் மூலம் 22 மில்லியன் ரூபாய்க்கு கடந்த சில வருடங்களுக்கு முன்னர் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கமைய விசாரணைகள் இடம்பெற்றிருந்தன.



இந்நிலையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர் என வவுனியா மாவட்ட செயலகத்தில் பணியாற்றும் உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளின் பின் குறித்த உத்தியோகத்தரை நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.