வவுனியா மற்றும் மன்னார் உட்பட பல மாவட்டகளுக்கு சிவப்பு எச்சரிக்கை!!

1517

நாட்டில் உள்ள கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை, மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் இன்றையதினம் (19.01.2025) பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் ‘சிவப்பு’ எச்சரிக்கை விடுத்துள்ளது.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

வடகிழக்கு பருவமழை காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் தீவில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கிழக்கு, ஊவா, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் சில இடங்களில் சுமார் 150 மில்லிமீற்றர் அளவில் அதிக பலத்த மழை பெய்யக்கூடும். மற்ற இடங்களில் சில இடங்களில் சுமார் 75 மி.மீ அளவில் கனமழை பெய்யக்கூடும் என்றும் அது மேலும் கூறியுள்ளது.



இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் அன்புடன் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.