வவுனியா ஆலயங்களில் இடம்பெற்ற புதுவருட சிறப்பு வழிபாடுகள்!!

1059

நாடளாவிய ரீதியில் புதுவருடப் பிறப்பு மிகவும் மகிழ்ச்சியாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதற்கமைய வவுனியா இந்து ஆலயங்களில் இன்று (01.01.2025) காலை விசேட வழிபாடுகள் இடம்பெற்றன.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

வேப்பங்குளம் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம், வவுனியா கந்தசாமி ஆலயம் மற்றும் வைரவபுளியங்குளம் ஆதிவிநாயகர் ஆலயங்களில் விசேட அபிசேக பூஜை வழிபாடுகள் இடம்பெற்றதுடன், அடியவர்கள் நெய் எண்ணை ஏற்றி வழிபாடுகளிலும் ஈடுபட்டனர். அதேபோல் வவுனியா வாழ்மக்கள் புதுவருட கொண்டாட்டங்களும் வான வேடிக்கைகளும் இடம்பெற்றன.



வழிபாடுகளில் கலந்து கொண்டோர் தமக்குள் வாழ்த்துக்களையும் பரிமாறிக் கொண்டனர்.