முல்லைத்தீவில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த இரு இளைஞர்களின் புகைப்படங்கள்!!

365

முல்லைத்தீவில் மாங்குளம், வெள்ளாங்குளம் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் நேற்றையதினம் (20-11-2024) மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

விபத்து சம்பவத்தில் மாங்குளம் பகுதியில் வசிக்கும் 20 வயதான விஜயகுமார் விதுசன் மற்றும் 23 வயதான ஜெயகுமார் விதுசன் ஆகிய இளைஞர்களே உயிரிழந்துள்ளனர்.



மேலும் குறித்த விபத்தில் 31 வயதான மற்றுமொரு இளைஞர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது விபத்தில் உயிரிழந்த இரண்டு இளைஞர்களின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.