முதல்முறையாக இரண்டு மலையகப் பெண்கள் நாடாளுமன்றத்திற்கு தெரிவு!!

487

நடைபெற்று முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் இரண்டு மலையக பெண்கள் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளனர்.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

பல ஆண்டுகளாக அரசியல் செய்யும், மலையக மக்கள் முன்னணி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தொழிலாளர் தேசிய சங்கம் உள்ளிட்ட கட்சிகளால் முடியாத ஒன்றை தேசியக் கட்சியான தேசிய மக்கள் சக்தி சாதித்துக் காட்டியுள்ளது.



இதன் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி சார்பில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிட்ட கிருஷ்ணன் கலைச்செல்வி 33,346 வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளார்.

அதேபோல மாத்தறை மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட சரோஜா போல்ராஜ் 148,379 வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளார்.

இப் பெண்கள் இருவரும் மலையகத்தின் உரிமைக் குரலாய் பாராளுமன்றத்தில் ஒலிப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. இவர்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள்.