வன்னிமாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனுவினை அகிலஇலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி இன்றையதினம் (09.10.2024)தாக்கல் செய்தது.
எதிர்வரும் நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் வன்னித்தேர்தல் மாவட்டத்தில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியானது சைக்கிள் சின்னத்தில் போட்டியிடுகின்றது.
இதனையடுத்து இன்று மதியம் வவுனியா நகரசபை வாயிலில் அமைந்துள்ள பொங்கு தமிழ்தூபி்க்கு சென்ற வேட்பாளர்கள் அங்கு அஞ்சலியில் ஈபட்டிருந்தனர். அதன்பின்னர் வவுனியா மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள தேர்தல் காரியாலத்தில் சுப
நேரத்தில் வேட்புமனுவினை தாக்கல் செய்தனர்.
இதன்போது வன்னிமாவட்டத்திற்கான முதன்மை வேட்பாளர் எஸ்.தவபாலன்,மற்றும் ஏனைய வேட்பாளர்கள், சட்டத்தரணி சுகாஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தனர்.